24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்; காசா மக்களுக்கு இஸ்ரேல் கெடு!
காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து ஹமாஸ் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இதன் காரணமாக காசாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேலிய போர்விமானங்கள், ட்ரோன்கள் மூலம் காசாவின் வடக்கு பகுதியில் கடந்த 13ம் தேதி துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டன. இது காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் முயற்சி என்று ஈரான் உள்ளிட்ட அண்டை நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.